
முறப்பநாட்டில் பைக் விபத்தில் முதியவர் பலியானார்.
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஆழிகுடியை சேர்ந்தவர் முருகையா(67). கடந்த 10 ந்தேதி மாலை 5 மணி அளவில் முறப்பநாட்டில் இருந்து பக்கபட்டிக்கு நாலுவழி சாலையில் எதிர் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து கரி ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை வல்லநாடு அகரத்தினை சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன்(41) என்பவர் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக லாரியும் மோபைட்டும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி எறிய பட்ட முருகையா படுகாயத்துடன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனாளிக்காமல் நேற்று அதிகாலை இறந்து விட்டார்.
இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.