தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உலக நன்மைக்காக சிறப்பு தொழுகை நடந்தது.
இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் மீலாது நபி விழா பெற்றது. விழாவிற்கு ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா மறைக்கார் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் செய்யது இப்ராஹிம் மூசா, நிர்வாக சபை உறுப்பினர்கள் ஜுபைர், முகமது உவைஸ் அப்துல் ஷெரிஃப், முகமது அசின், ஆகியோர் முன்னிலை வைத்தனர். மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி மாணவர்கள் கபீர் அஹமத் கிராத் ஓதினார்.
ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா வரவேற்றார். இதில் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், தமிழ்நாடு ஜமாஅத்துல்மா சபை பொருளாளர் அரசு காஜி முஜிபுர் ரகுமான், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் கலந்துகொண்டு முகமது நபியின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். இது தொடர்ந்து அன்னை கஜிதா மதரஸா பேராசிரியர் முகமது அபூபக்கர் சித்திக் உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினர். பின்னர் அனைவருக்கும் நேச்சை (இனிப்பு) வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஸ்ராத் அகுமது, பேராசிரியர்கள் செய்யது அப்பாஸ், அப்துல் கனி, மதரஸா தலைவர் நவரங் சகாப்தின், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் எம்.எஸ்.எப். ரஹ்மான் நன்றி கூறினார். மேலும் மீலாது நபியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது