இதுவரை..
குவைத் செல்வதற்கு டாக்டர் சுதாகர் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியவர்கள் குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தினர். இந்த பயணத்தினை பற்றி எழுதி வருகிறேன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து துவங்கி சென்னை விமான நிலையம் வந்து தற்போது குவைத் விமான நிலையத்தில் இறங்கியுள்ளோம். எங்களை தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க செயலாளர் அசோக் குமார் அய்யா தங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். & முத்தாலங்குறிச்சி காமராசு.
இனி.
எங்களது கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. குவைத்தில் விமான நிலையத்தில் இருந்து மூன்று எண் கொண்ட சாலைகள் பிரிகின்றன. இதில் 13 ம் எண் சாலை குவைத் சிட்டி வழியாக பாகில் என்ற இடத்தில் போய் சேருகிறது. 14 ம் எண் சாலை குவைத் சிட்டியில் இருந்து கிளம்பி சவூதிஅரோபியா போய் சேரும். 15 எண் சாலையை பொறுத்தவரை ஏர்போர்ட்ல் இருந்து சிட்டியை சுற்றி வரும். நாம் 15 எண் சாலையில் இருந்து கிளம்பி 51 எண் சாலை வழியாக காரை செலுத்துகிறோம்.
இந்த சாலையில் சுபான் என்ற இடத்தினை முதலில் அடைவோம். சுபான் என்ற இடம் குவைத்தில் மிக முக்கிய நகரமாகும். இங்குத்தான் உணவு பொருள்கள் தயார் செய்யும் பல கம்பேனிகள் உள்ளன. குறிப்பாக பெப்சி, கோக்க கோலா போன்ற உணவு பொருள்கள் உற்பத்தி நிலையங்கள் இங்கே காணப்படுகின்றன. இதனால் இந்த இடங்கள் மிக முக்கிய இடங்களாக கருதப்படுகிறது.
அதையும் தாண்டி 73 எண் கொண்ட சாலை வருகிறது. அந்த வழியில் துபான் செமண்டரி என்ற இடம் வருகிறது. இந்த இடமும் குவைத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இடமாகும். இங்குத்தான் இறந்தவர்களை புதைக்கும் புதைக்குழி உள்ளது. இதைத் தாண்டி செல்லும் போது சின்டாக் என்ற இடம் வருகிறது. இந்த இடங்களில் மிகப்பெரிய வியாபாரதலங்கள் அமைந்துள்ளன. குவைத் நாட்டின் மொத்த மக்களும் பொருள்கள் வாங்க இந்த இடத்தில் உள்ள மால்களுக்குதான் வந்து செல்ல வேண்டும். எனவே இந்த இடம் முக்கிய பொறுப்பை பெறுகிறது.
அதை தாண்டி வருகிறோம். மெகபுலா என்ற இடம் உள்ளது. அதன் பின் 13 வது எண் சாலையை தொடுகிறோம். இங்கு ஒரு பெட்ரோல் பல்க் உள்ளது. அதில் இடது புறம் திரும்பினால் நாம் தங்கும் இடமான அபு கலிபா வந்து சேர்ந்து விடுவோம்.
அதற்கு முன்னால் குவைத் வரலாற்றை விடு பட்ட இடத்தில் இருந்து அசைப்போட ஆரம்பித்தேன்.
ஜனவரி 1991 நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் நாடுகளின் கூட்டணி, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் தலைமையில் ஈராக் படைகளுக்கு எதிராக வான் வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. ஐந்து வாரங்களுக்குப் பிறகு அது குவைத் மற்றும் ஈராக் மீது தரைவழித் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி பிற்பகுதியில் குவைத் ஈராக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. மே மாதத்தில் நூறாயிரக்கணக்கான குவைத் மக்கள் வெளிநாட்டு அகதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அதன் பின் படையெடுப்பு, கொள்ளை மற்றும் போர் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் கண்டு பிடித்தனர்.
படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு குவைத் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்தது. போரின் போது பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறினர். 1991 இல் பெரும்பாலான நாட்டவர்கள் திரும்பி வந்தாலும், பல நாட்டவர்கள், குறிப்பாக பாலஸ்தீனியர்கள் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. எதிர்ப்பில் பின் தங்கியவர்களுக்கும் தப்பி ஓடியவர்களுக்கும் இடையே ஒரு பிரிவு உருவானது. அரசியல் தாராளமயமாக்கலுக்கு அழுத்தம் கொடுக்கும் பெரும்பான்மையினருக்கும், ஆளும் குடும்பத்திற்கும் இடையே மற்றொரு நிலை உருவானது. இவர்களின் நடத்தை குவைத்தில் கணிசமான மக்கள் வெறுப்பைத் தூண்டியது. அரசாங்கத்தின் ஆரம்ப பதில்- இராணுவச் சட்டத்தை நிறுவுதல், நிகழ்ச்சி விசாரணைகளை நடத்துதல்–, புனரமைப்பு மிகவும் தாராளவாத நிலைப்பாட்டிற்கு வழிவகுத்தது. இது 1992 இல் தேசிய சட்டமன்றத்திற்கான தேர்தல்களுக்கு வழிவகுத்தது. அதில் இஸ்லாமிய வேட்பாளர்களும், அவர்களுக்கு அனுகூலமாக உள்ள சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையம், 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி, ஈராக்- & குவைத் எல்லையை முறையாக பிரித்தது . கமிஷனின் கண்டுபிடிப்புகள் பொதுவாக குவைத்துக்கு சாதகமாக இருந்தன. சஃப்வான் மற்றும் போட்டியிட்ட அல்-ருமைலா எண்ணெய் வயல் பகுதிகளில் ஈராக் எல்லையை சற்று வடக்கே நகர்த்தி, அதன் மூலம் குவைத்துக்கு கூடுதல் எண்ணெய் கிணறுகள் மட்டுமின்றி, ஈராக்கிய கடற்படை தளமான உம்மு கச்சரின் ஒரு பகுதியையும் கொடுத்தது. குவைத் ஐ.நா.வின் எல்லைப் பதவியை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஈராக் அதை நிராகரித்தது. குவைத் பிரதேசத்திற்கான உரிமை கோரலைத் தொடர்ந்து குரல் கொடுத்தது.
ஈராக்கில் சதாம் ஹுசைனின் பாத் ஆட்சி நீடித்தது. 1990&-91 நிகழ்வுகள் மீண்டும் நிகழும் என்ற அச்சத்தை குவைத்தியர் மத்தியில் ஏற்படுத்தியது. 2003 ஆம் ஆண்டு வரை, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஈராக்கின் மீது படையெடுப்பைத் தொடங்கும் வரை, பதட்டமான நிலைப்பாடு நிலவியது. எல்லையில் ஈராக்கிய துருப்பு நகர்வுகளால் மோசமடைந்தது. ஈராக் போரின் வீழ்ச்சி குவைத்தில் பெரும் நிம்மதி ஏற்படுத்தியது. இதனால் குவைத் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் முக்கியமான ஆதரவை வழங்கியது. இருப்பினும், ஈராக் மீதான அடுத்தடுத்த ஆக்கிரமிப்பு , மற்றும் அது உருவாக்கிய கொரில்லா கிளர்ச்சியின் மீது சில குவைத்தியர்களின் ஈர்ப்பு புதிய அரசியல் பதட்டங்களுக்கு வழிவகுத்தது.
2001 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆளும் அமீர் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா, சில பொது நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டார். 2006 இல் ஷேக் ஜாபர் இறந்ததைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் ஷேக் சாத் அல்- அப்துல்லா அல்-சலீம் அல்-சபா அமீராக ஒப்புக்கொண்டார். 1970களின் பிற்பகுதியிலிருந்து பட்டத்து இளவரசராக இருந்த ஷேக் சாத், நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்கு ஆதரவாக பதவி விலக மறுத்ததால் அரசியல் நெருக்கடியைத் தூண்டினார். குவைத்தில் பெண்களின் உரிமைகள் மார்ச் 4, 2006 அன்று குவைத்தின் அல்-துலை பியாவில் பெண்களின் உரிமை களுக்கான பேரணி நடந்தது.
அரசியல் முட்டுக்கட்டை மற்றும் நெருக்கடி 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குவைத்தில் அடிக்கடி சட்டமன்றத் தேர்தல்களுக்கு வழிவகுத்தது. பல சந்தர்ப்பங்களில், அரசாங்கப் பிரமுகர்களின் சாத்தியமான விசாரணைகள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்புகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் ஷேக் சபாவை, நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வழிவகுத்தது. இது குறுகிய காலத்தில் நெருக்கடிகளைத் தவிர்த்துவிட்டாலும், அது பாராளுமன்றத்தில் அரச குடும்பத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்கவில்லை.
அதே நேரத்தில், முக்கியமான அரசியல் சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. 2006 இல், 1980 முதல் நடைமுறையில் இருந்த 25-தொகுதி அமைப்புக்கு பதிலாக புதிய 5- தொகுதி வடிவமானது பழங்குடியின வழிகளில் வாக்களிப்பதை ஊக்கப் படுத்துவதையும், வாக்குகளை வாங்குவதை கடினமாக்கு வதையும் நோக்கமாகக் கொண்டது. 2005 இல் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். மேலும் மே 2009 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் நான்கு பெண் வேட்பாளர்கள் பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றனர்.
2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் இளைஞர் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இதன் விளைவாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அரசாங்க சார்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தலில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு பாராளுமன்றத்தை உருவாக்கும் வாய்ப்பை எதிர்கொண்டதால், அக்டோபரில் அமீர் தேர்தல் விதிகளில் மாற்றங்களை உத்தரவிட்டார். அவை அரசாங்கத்திற்கு ஆதரவான பெரும்பான்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் வழிமுறையாக பரவலாகக் காணப்பட்டன. இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான குவைத் எதிர்ப்பாளர்களை போராட்டத்துக்கு கொண்டு வந்தது. மேலும் போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் கையெறி குண்டுகளால் ஆர்ப்பாட்டங்களை கலைத்தனர். எதிர்க்கட்சிகள் டிசம்பரில் தேர்தலை புறக்கணித்தனர். இதன் விளைவாக பல இடங்களில் மிகக் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டது.
2010 களின் நடுப்பகுதியில், குவைத், மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைப் போலவே, 2014 இன் பிற்பகுதியில் தொடங்கிய எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொண்ட குவைத் அரசாங்கம் மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை குறைத்தது. உலகின் மிக உயர்ந்த ஒன்றாக இருந்தசர்வதேச நாணய நிதியம் (மிவிதி) மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச வளர்ச்சிக் குழுக்களால் பாராட்டப்பட்டன. ஆனால் நுகர்வோர் விலைகள் திடீர் உயர்வு குவைத்தில் அரசியல் எதிர்ப்பிற்கு புதிய பலத்தை அளித்தது.
2016 நவம்பரில் நடந்த வாக்கெடுப்பில், ஜனரஞ்சக நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்த எதிர்க்கட்சிகளும், வேட்பாளர்களும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ஏறக்குறைய பாதியை வென்றனர். அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சி தலைமையிலான பாராளுமன்றத்திற்கும் இடையில் புதுப்பிக்கப்பட்ட பதற்றம் பல அமைச்சரவை நீக்கங்களுக்கு வழிவகுத்தது. அதே நேரத்தில் நிசிசி உறுப்பு நாடுகளிடையே சர்வதேச உடன்படிக்கைக்கு ஏற்ப மதிப்பு கூட்டப்பட்ட வரியை (க்ஷிகிஜி) செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் போன்ற பல சிக்கன நடவடிக்கைகள் இருந்தன. முடிவில் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்தது.
உலகளாவிய சிளிக்ஷிமிஞி-19 தொற்றுநோய்க்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டில் எண்ணெய் விலை மீண்டும் சரிந்தது. செப்டம்பரில் ஷேக் சபாவின் மரணத்தின் போது, கடன் உச்சவரம்பை உயர்த்துவது தொடர்பாக பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு முட்டுக்கட்டை தீர்க்கப்படாமல் இருந்தது. அவரது ஒன்றுவிட்ட சகோதரர், ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, அரியணையில் அமர்ந்தார்.
ஜனவரி 2021 இல், பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர் பிரச்சனை இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் அமைச்சரவை நியமனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். பிரதம மந்திரி ராஜினாமா செய்தார், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஷேக் நவாஃப் அவர்களால் மீண்டும் நியமிக்கப்பட்டார், அவர் புதிய அமைச்சரவையை அமைக்க அவருக்கு பணித்தார்.
இது போன்ற குவைத் நகர்ந்து வந்த வரலாற்றை நாம் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொண்டோம். குவைத் சிறிய நாடாக இருந்தாலும் நிறைய செய்திகளை சுமந்துகொண்டிருக்கிறது. அதில் போரில் தாக்குதல் பின்பு மீண்ட குவைத் வரலாறுதான் வரலாற்று சிறப்பானது. அதை நாம் தொடர்ந்து பார்க்கத்தோனே போகிறோம்.
இதற்கிடையில் அசோக் குமார் அய்யா எங்களை நாங்கள் தங்கும் இடமான அபு கலிபாவுக்கு கூட்டி வந்த்£ர். இந்த இடம் கிட்டத்தட்ட அரபி கடலோரம் உள்ளது. இங்கு நாங்கள் ஒரு கட்டிடத்தில் ஆறாவது மாடியில் இருந்தோம்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒரு வீடு. இந்த வீட்டில் இரண்டு பெட் ரூம், சமையல் அறை மற்றும் வரவேற்பரை இருந்தது. இந்த வீடு முழுவதும் குளிரூட்டப்பட்டு இருந்தது. சன்னல் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு பெட்ரூமிலும், டாக்டர் சுதாகர் அய்யா ஒரு பெட்ரூமிலும் தங்கியிருந்தோம். சன்னல் வழியாக வெளியே பார்த்தால் அரபி கடல் தெரிந்தது. மேலும் வரிசை வரிசையாக கார்கள் அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது. கிட்டதட்ட நமது ஊரில் வீட்டுக்கு மூன்றுக்கு மேற்ப்பட்ட மோட்டார் பைக் இருப்பது போல வீட்டுக்கு பல கார்கள் இங்கே உள்ளன. எனவே இந்த கார்கள் எல்லாமே கட்டிடங்களின் கீழே அணிவகுத்து நின்றது.
இந்த இடத்தில் மிக அதிகமான தமிழர்கள் குடியிருந்தார்கள். இதே போலவே குவைத்தில் மக்காப், பாஹில் ஆகிய இடங்களிலும் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள்.
அதே போல் குவைத்தில் சால்மியா என்ற இடத்தில் இந்தியர்கள் மிக அதிகமாக உள்ளனர். இங்குதமிழர்கள் மட்டுமல்லாமல் வட இந்திய மாநிலத்தினைசேர்ந்த மக்கள் அதிக பேர் வசித்து வருகிறார்கள்.
குறிப்பாக நமது சங்கத்தின் முன்னோடியான பலவேச முத்து அய்யா, பொதுச்செயலாளர் அசோக் அய்யா, பொருளாளர் சுப்பிரமணியன் அய்யா உள்பட முக்கிய நபர்கள் எல்லாம் இங்கே தான் வசிக்கிறார்கள்.
சொல்லப்போனால் இந்த இடத்தினை பொறுத்தவரை மும்பையில் தாராவி போன்றது. தாராவி ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரி என்பார்கள். இதுக்குறித்து “ஸ்லாம் டாக் மில்லியர்” என்ற இந்தி திரைப்படம் வந்துள்ளது . இந்த படத்திற்கு இசை அமைத்த வகைக்கு ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஆனால் தாராவி மிகப்பெரிய சேரி. குவைத்தில் உள்ள அபு கலிபா மிகப்பெரிய பில்டிங் ஏரியா. மிகவும் பிரமாண்டமான பணக்கார ஏரியா. எங்கு பார்த்தாலும் வானுயரந்த கட்டிடங்கள் நிறைந்து காண்படுகிறது. இங்கு வாழும் மக்களும் வசதியானவர்களாகவே உள்ளனர். இங்கு சிறப்பான ஹோட்டல்கள் எல்லாம் உள்ளன. குவைத்தின் இதயமாகவே இவ்விடம் கருதப்படுகிறது.
அபு கலிபா மிக முக்கிய நகரமாக இருக்க காரணம் இவ்விடத்தின் அருகில் எண்ணெய் கிணறும், அதனருகே தலைமை அலுவலகமும் இருப்பதே காரணமாகும். எனவே தான் எண்ணெய் கிணறு சம்பந்தப்பட்ட வேலை பார்க்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அபு கலீபாவில் சமீபத்தில் 25 வருட காலமாக தமிழர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். 2000 த்துக்கு முன்னாள் கணிசமான தமிழர்கள் தான் இருந்துள்ளனர் என்ற தகவலை நமக்கு பொருளாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இங்கு பாரசீக வளைகுடா உள்ளது. ஈரானுக்கு சவூதி அரோபியாவுக்கும் இடையே உள்ள இந்த வளைகுடா வழியாகத்தான் குவைத் கடற்கரை துறைமுகம் இயங்கி வருகிறது. இங்குள்ள கடலில் அலை அடிப்பது கிடையாத.
கடற்கரை மிகச்சிறப்பாக இருக்க பாரசீக வளைகுடா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த விசயங்களை எல்லாம் அசைப்போட்டுக்கொண்டே சிறு நேரம் ஓய்வு எடுத்தோம். எங்களை காலை வந்து அழைத்துச்செல்கிறேன் என கூறிவிட்டு அசோக்குமார் அய்யா கிளம்பி விட்டார்.
நமது ஊர் தட்ப வெட்ப நிலைக்கிடையில், ஒரு வீடு முழுவதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருப்பது வித்தியாசமாக இருந்தது.
நமது ஊரில் ஒரு அறையில் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்தால் கூட, நாம் குளிர் அதிகமானால் -ஏ.சி.யை அணைத்து விடுவோம். ஆனால் இங்கே அணைக்கப்படாமல் ஏ.சி . ஓடிக்கொண்டே இருந்தது.
வெப்ப நாட்டில் குளிரை அனுபவித்தப்படியே போர்வையை இழுத்து மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை.
நாளை நாம் குவைத்தில் எதையெல்லாம் காணப்போகிறோம் என என் மனதில் பல கற்பனைகள் வந்து கொண்டே இருந்தது.
(குவைத் பயணம் தொடரும்)