ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தில் இரண்டாவது நாளாக மூழ்கடித்து செல்லும் மழை நீர் போக்குவரத்து துண்டிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் உள்பட மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் மிக முக்கிய பாலமாக பார்க்கப்படும் ஏரல் உயர் மட்ட பாலம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தின்போது சேதம் அடைந்தது. இதை எடுத்து தற்காலிகமாக தரைமட்ட பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் ஏறல் உயர்மட்ட பாலத்தின் சிறப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று மாலை முதல் தரைமட்ட பாலத்தில் பாலத்தின் மேல் தண்ணீர் சென்றதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சுமார் 3 அடி உயரத்திற்கு தரைமட்ட பாலத்தில் இருந்து சுமார் மூன்றடி உயரத்திற்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.


