தாமிரபரணியை காப்பாற்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி அவர்கள் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக களம் இறங்கி ஆய்வுசெய்தனர்.
இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது.
தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்ற வேண்டும் என நான் தொடர்ந்த வழக்குக்காக நதியை நேரில் பார்வையிட நீதியசர்கள் மாண்புமிகு ஜி.ஆர்.சுவாமிநாதன், மாண்புமிகு புகழேந்தி ஆகியோர் நெல்லை வந்து ஆய்வு செய்தனர். திருநெல்வேலி தாமிரபரணி கரை பேரின்ப விலாஸ் தியேட்டர் பின்புறம், பரணி ஹோட்டல் முன்புறம், சிந்துபூந்துறை, உடையார் பட்டி, ராமமையன் பட்டி, சத்திரம் புதுக்குளம், குறுக்குத்துறை பகுதியில் பார்வையிட்டனர். இந்த சுற்றுபயணத்தினால் நிச்சயம் தாமிரபரணிக்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பிக்கை பிறந்துள்ளது. நதியை காப்பாற்ற ஓடோடி வந்த நீதியரர்களுக்-கு தாமிரபரணி கரை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர், மாநகராட்சி வழக்கறிஞர் உள்பட அனைவருக்கும் நன்றி.
தாமிரபரணி வழக்கை பணம் எதுவும் வாங்காமல் நடத்திக்கொண்டிருக்கும் வைகை நதிக்கரை நாயகன், தாமிரபரணி காவலன் எங்கள் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணிக்கும் அவரது உடன் உழைத்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி. உயர்நீதி மன்றம் எங்களுக்காக நியமனம் செய்த வழக்கறிஞர் அருள் அவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தாமிரபரணியின் நிலையை நீதியரசர்களுக்கு அருமையாக விளக்கி கூறினார். அவருக்கும் நன்றி.
தாமிரபரணிக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் அரசிடம் பெற்றுத் தருகிறேன் என வாக்களித்து ஆய்வில் உடன் பயணித்த ராபர்ட் புருஸ் எம்.பி அய்யா அவர்களுக்கும் நன்றி.
எங்களுக்கு தேவையான புகைப்படங்களை எடுத்து தந்து உதவிய தாமிரபரணி ஆர்வலர்கள். ஆங்காங்கே நின்று உதவி செய்தவர்கள், உடன் பயணித்தவர்கள், எங்கள் தேவை அறிந்து வேண்டிய ஆவணங்களை தயாரித்து தந்து உதவியவர்களுக்கு மிக்க நன்றி.
நீதியரசர்கள் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட ஆட்சியர், மாநகர கமிஷனர் ஆகியோருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தாமிரபரணியை மீட்டெடுக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடுவோம். நதியை மீட்டெடுப்போம் என்று அவர் கூறினார்.