தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின போட்டிகளில் பள்ளி, பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், அமெச்சூர் போட்டியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய வாக்காளர் தினம், 2022 னை ஒட்டி ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திட தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. எனது வாக்கு எனது எதிர்காலம்: ஒரு வாக்கின் வலிமை என்ற கருத்தினை வலியுறுத்தி இவ்விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டிகள் ஜனவரி 25ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 15 வரை நடத்தப்படும். இப்போட்டிகள் அனைத்து தரப்பு மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதோடு அவர்களது ஜனநாயகத்தையும் வலுப்படுத்துகிறது. மேற்கண்ட போட்டிகள் வினாடி வினா, பாட்டுப்போட்டி, காணொலி தயாரித்தல், சுவரொட்டி வடிவமைப்பு மற்றும் முழக்கம் எழுதுதல் ஆகிய 5 தலைப்புகளில் நடைபெறவுள்ளது.மேற்கண்ட போட்டிகளில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கலாம், வயது வரம்பு கிடையாது. மேற்காணும் போட்டிகள் பங்கேற்பவர்கள் அமெச்சூர் போட்டியாளர், தொழில்முறை போட்டியாளர் மற்றும் நிறுவனம் சார்ந்த போட்டியாளர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பங்கேற்கலாம். பள்ளி மற்றும் கல்லூரியினை சார்ந்த மாணவ மாணவியர் நிறுவனம் என்ற பிரிவின் கீழ் போட்டிகளில் பங்கேற்கலாம். மேற்கண்ட போட்டி குறித்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியான https://ecisveep.nic.in/contest/ல் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டிகளில் பங்கேற்க விரும்பும் நபர்கள் தங்களது படைப்புகளை மார்ச் 15க்குள் இந்திய தேர்தல் ஆணைய இணையதள முகவரியான [email protected] ல் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு போட்டியாளர் மேற்கண்ட ஏதேனும் ஐந்து போட்டியில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்க முடியும். வீடியோ, பாடல் மற்றும் முழக்கம் எழுதுதல் ஆகியவை இந்திய அரசின் அதிகாரபூர்வமான 22 மொழிகளில் எந்த மொழியில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். மேலும் போட்டிகளில் வெல்பவர்களுக்கு பரிசு தொகையோடு அவர்களது படைப்புகள் கௌரவிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தலில் விளம்பரப்படுத்தப்படும்.எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, பாலிடெக்னிக் மற்றும் அனைத்து கல்லூரி மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பொருமளவு பற்கேற்கவும், மாணவர்கள் தவிர அமெச்சூர் போட்டியாளர்கள் தனியார் நிறுவன பணியாளர்களும், அரசு கழகங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவன ஊழியர்களும் பெருமளவு இப்போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களிடம் வாக்கின் முக்கியத்துவத்தை வலியுத்தவும், போட்டிகளில் அதிகளவில் பங்கேற்று வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.