செய்துங்கநல்லூரில் உள்ள பீமா அம்மா மாஹீன் அபுபக்கர் ஒலியுல்லா தைக்காவில் 84 வது ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் மாலை மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு அரண்மனை கொடி -ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊர்வலம் பீமா தைக்காவில் இருந்து முக்கி ய வீதிகள் வழியாக சந்தை பேட்டை பக்கீர் சாஹீப் ஒலியுல்லா தர்கா வந்து சேர்ந்தது. அதன் பின் கொடியேற்றப்பட்டது. இரவு விளக்கு ராத்திரி நடந்தது. மறுநாள் காலை தப்ரூக் எனும் நேர்ச்சை நடந்தது. இந்த தைக்கா திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து நிர்வாகத்தின் சார்பில் கௌரவித்தனர்.
இந்த விழாவில் முகைதீன் ஜாமியா பள்ளி வாசல் இமாம் ஹசன் ஞானியார் பைஜி, சேக் அப்துல்காதிர் உஸ்மானி, முகம்மது ராபி ரஷிதி சந்தை பக்கீர் மஸ்தான் தர்கா நிர்வாகி சேக் அசன் அலியார் ஸமதானி, ஏர்வாடி கீழக்கரை இமாம் ரியாஸ் ஸமதானி ஹஸரத், கொங்கராயகுறிச்சி இமாம் சித்திக் உஸ்மானி உள்பட பலர் கலந்துகொண்டு திக்ரு மஜ்லிஸ் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு செயலாளர் கே.எஸ்.புகாரி தலைமையில் விழாகுழுவினர் செய்திருந்தனர்.


