1816 – அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1821 – கிரேக்க விடுதலைப் போரில் உதவியமைக்காக பேராயர் கிப்பிரியானொசு உட்பட 470 முக்கிய சைப்பிரசினர் தூக்கிலிடப்பட்டனர்.
1837 – பிரித்தானிய இலங்கை, சட்டவாக்கப் பேரவையில் முதல் தடவையாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.[1]
1850 – பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார்.
1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1875 – உதுமானியரின் ஆட்சிக்கு எதிரான எர்சகோவினா கிளர்ச்சி ஆரம்பமானது. இது மூன்று ஆன்டுகள் நீடித்தது.
1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின.
1900 – ஆத்திரேலியக் கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆத்திரேலியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.
1900 – வெளிநாட்டு கிறித்தவ மதப்பரப்புனர்கள் 45 பேரைத் தூக்கிலிட வடக்கு சீனாவின் சான்சி மாகாண ஆளுநர் உத்தரவிட்டார்.
1903 – யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு உருவானது.[2]
1918 – அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் உயிரிழந்தனர், 171 பேர் படுகாயமடைந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
1948 – பாக்கித்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
1955 – ரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை அணுவாயுதங்களினால் ஏற்படும் அழிவுகளைக் குறைக்கக் கோரியது.
1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.[3]
1956 – கிரேக்கத்தில் சைக்கிளேடு தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கமும், ஏஜியன் கடலில் ஆழிப்பேரலையும் ஏற்பட்டதில் 53 பேர் உயிரிழந்தனர்.
1982 – அமெரிக்காவின் பான் ஆம் விமானம் லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 145 பேரும் தரையில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
1986 – நியூசிலாந்தில் ஒருபாலுறவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1995 – யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1995 – யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2002 – ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
2006 – 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
2006 – அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.
2011 – தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.


