மத்திய அரசின் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் கரும்பன், விசிக மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ (எம்)மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், சிபிஐ(எம்.எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், விசிக துணை பொதுச்செயலாளர் வழ.வில்லவன் கோதை, சிபிஐ மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


