தூத்துக்குடியில் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து விடுத்துள்ள அறிக்கையில், “தூத்துக்குடி பிரதான சாலை அதாவது ECR இணைப்பு சாலையில் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே ரவுண்டா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாகும். மேலும் பள்ளிகள் நிறைந்த பகுதி, பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் சைக்கிள்களில் சென்று வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி நகரையும் ECR சாலையையும் இணைப்பதால் பேருந்துகள் மற்றும் கார்கள் அதிகமான செல்கின்றன. இந்நிலையில் ரவுண்டானா அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சரள் விரிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்லும் போது புழுதி கிளம்பி சுவாசப் பிரச்சனை ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் ரவுண்டானாவின் விட்டத்தை சிறிது குறைத்தால் நல்லது. எனவே நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக்குழு வலியுறுத்தியுள்ளார்.


