1834 – கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
1888 – இலண்டன் ஈஸ்ட் என்ட் பகுதியில் பதினொரு பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1895 – ஆஸ்கார் வைல்டு தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை ஆரம்பமானது, இறுதியில் தற்பால்சேர்க்கை குற்றத்திற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் உருசியா திரும்பினார்.
1922 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
1933 – நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் சப்பானியப் படை அமெரிக்க மற்றும் பிலிப்பீன்சு படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
1948 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் 16 நாடுகளுக்கு $5 பில்லியன் உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டார்.
1948 – தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 – உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்டார்.
1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
1975 – அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1981 – உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.
1997 – அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – 2004 மத்ரித் தொடருந்து குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இசுலாமியத் தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
2009 – நியூயார்க்கில் பிங்காம்ப்டன் என்ற இடத்தில் இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.
2016 – 214,488 வணிக நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
2017 – உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர்.
2018 – கலிபோர்னியா, சான் புரூனோ நகரில் உள்ள யூடியூப் தலைமையலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.