
தூத்துக்குடி கல்லூரிப் பேராசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் தான், பல்வேறு சமூக தல இயக்கங்களுடன் இணைந்து மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் உள்பட பல்வேறு சமூகநலப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். கடந்த 2018ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றேன்.
இதுபோல் சமூக சேவகர் ஸ்டேன் சாமிக்கு கடந்த 2021 ஜூலை 17ல் அஞ்சலி செலுத்தப்பட்டது. அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக போலீசார் என்மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த இருவழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மட்டுமின்றி குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்து தனித்தனி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.