
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 95 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி 22 இடங்களில் தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 4-வது நாளான இன்று 36 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 4பேரும், நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 7பேரும் டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 25 பேரும் என மொத்தம் 36 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 95 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.