தமிழ் மக்களின் உரிமைகளையும், கலாச்சாரத்தையும் அடகு வைத்த ஆட்சியை நாம் அகற்ற வேண்டும். பத்மநாபமங்கலத்தில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஊரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அங்கிருந்த மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அதன்பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த ஆட்சி தமிழ் மக்களின் உரிமைகளையும், கலாச்சாரத்தையும் அடகு வைத்த ஆட்சி. எனவே இதனை மக்களாகி நீங்கள் நீக்க வேண்டும். மேலும் ஸ்டாலினை முதல்வராக்க நீங்கள் அனைவரும் எங்களின் கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும் என்று பேசினார்.


