முக்குலத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி செய்துங்கநல்லூரில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
முக்குலத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரியும் செய்துங்கநல்லூரில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். விவசாய சங்கத்தலைவர் குமார், கொம்பையா குமார், முருகன், பட்டு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்குலத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்காத அதிமுக அரசுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது என்றும் அதிமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துரை, பேச்சிமுத்து, சுரேஷ், ஆச்சிமுத்து, கார்த்தி, தில்லை மற்றும் செய்துங்கநல்லூர் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் அங்கு வந்த செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


