செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோஜர் முன்னிலை வகித்தார். சிறுதொழில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார்.பாரத ஸ்டேட் வங்கி முன்னோடி வங்கியின் துணை மேலாளர் விஜயகுமார், கரூர் வைசியா வங்கியின் கிளை மேலாளர் ஜுடு அந்தோணி, தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொறியாளர் இராமச்சந்திரன் , தொழில் முனைவோர்கள் சிவசங்கர் கலாநிதி ஆகியோர் மத்திய மாநில அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்ற தொழில் துவங்குவது குறித்து பேசினர். இந்த முகாமை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் இணைந்து நடத்தியது. கல்லூரியில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஆலோசனை பெற வந்த ஏனைய பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர்.ஸ்டீபன் தலைமையில் செய்துங்கநல்லூர் தூய சவேரியார் பாலிடெக்னிக் பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ் அலுவலர் ஆறுமுகசேகர் மற்றும் மாணவர்கள், மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.