வல்லநாட்டில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில் வல்லநாட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது. சித்த மருத்துவர் செல்வகுமார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பெரியசாமி, வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து ஊராட்சி செயலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நிலவேம்பு காசயத்தினை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியல் தங்கராஜ், நங்கமுத்து, பொன் பாதர் வெள்ளை, வடிவேலன், மனித வள மேம்பாட்டு துறை இசக்கி முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் பரமசிவன், தங்கம் பரமசிவன், பேச்சி முத்து, மாடசாமி, முத்துவேல், கோபால், மாரிமுத்து, செல்வம், பேபி மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்பானவை
October 4, 2024