கருங்குளம் யூனியனுக்குட்பட்ட அரசர்குளத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கூடத்திற்கான புதிய கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இதனை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி, கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதிராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் காசிராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், விவசாய அணி மாரியப்பன், ராமையா, பொன்பாண்டி, கேடிசி மாரியப்பன், ராமானுஜம்புதூர் சின்னதுரை உட்பட பலர் உடன் இருந்தனர்.


