செய்துங்கநல்லூரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் இன்றைய தினம் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் வட்டார தேர்தல் பணி அலுவலகத்தில் வைத்து தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் ஸ்ரீரங்கன், சேக் அப்துல் காதர், மதிமுக கருங்குளம் ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் சுடலை, கம்யூனிஸ்ட் நிர்வாகி ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மாரி, அறிவழகன், நடராஜன், விசிக நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் புளியங்குளம் விஜயமுத்து, கருங்குளம் ஒன்றியம் சிவகுரு, பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் கருங்குளம் ஒன்றிய செயலாளர் மணி, நிர்வாகிகள் கனி, கார்த்திக் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மாவட்ட செயலாளர் மோத்தி முசாமில், உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


