வல்லநாடு அடுத்த விளாத்திக்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி மூக்கம்மாள்(42). கூலித்தொழிலாளியான இவர் தினமும் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு மாலை 7 மணி அளவில் சென்று விட்டு காலை 7 மணிக்கு வீடு திரும்புவார். வழக்கம் போல் கடந்த 23ம் தேதி மாலை 7 மணிக்கு வேலைக்கு சென்றார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலிசார் இதுகுறித்து விசாரனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு நாணல்காட்டான்குளம் அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக முறப்பநாடு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் கிடந்த உடல் மூக்கம்மாளின் உடல் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரின் உடம்பில் முதுகு, கால், கை, கழுத்து என 4 இடங்கில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. மேலும் உடல் அருகில் மது பாட்டில்கள் காணப்பட்டது. போலிசார் மூக்கம்மாளின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மூக்கம்மாளை மது போதையில் இருந்தவர்கள் அவரை வழிமறித்து கடத்தி கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


