வல்லநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் போலீஸ்காரர் மற்றும் ரவுடி உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் கண்ணன் (32), என்பவரும் அவரது நண்பரும் கடநத் 2018-ல் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜாமீனில் வந்துள்ளதுள்ளார்.
இந்நிலையில், கண்ணனின் கொலைக்கு பழிவாங்குவதற்காக அவரது தம்பி ஏரல் அருகேயுள்ள மேலமங்களகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த துரைமுத்து (29) என்பவர் அந்த முக்கிய குற்றவாளியை கொலை செய்வதற்காக திட்டமிட்டு வெள்ளூருக்கு வந்தாராம். இதுகுறித்து டிஎஸ்பி வெங்கடேஷனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டிஎஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் அங்குள்ள தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் தேடுவதையறிந்த துரைமுத்து, மனக்கரை வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்தனர். அப்போது துரைமுத்து போலீசார் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். இதில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தலைமைக் காலவர் சுப்பிரமணியன் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் துரைமுத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அவரும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த காவலரின் உடலையும், படுகாயம் அடைந்த ரவுடியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ரவுடி துரைமுத்து உயிரிழ்நதார். இந்த சம்பவம் எதிரொலியாக மனக்கரை, ஆழ்வார்கற்குளம், உள்ளிட் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன், பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெரியசாமி. சுப்பிரமணியன், கடந்த 2017-ல் காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். சமீபத்தில் தனிப்படை பிரிவில் பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 6 மாத ஆண்குழந்தை உள்ளது.


