ஸ்ரீவைகுண்டம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் பேரூர் தேசிய சுதந்திர செந்திவிநாயகர் கோவிலில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீவை பஞ்சாயத்துராஜ் நகர அமைப்பாளர் கண்ணன், நகர தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் நகர தலைவர் சேதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவை பஞ்சாயத்துராஜ் வட்டார அமைப்பாளர் வெள்ளூர் மகேஷ் வரவேற்றார்.
தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தியாகி செந்திபெருமாள் நினைவுக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி பேசினார்.
ஸ்ரீவை கிழக்கு வட்டார தலைவர் சுயம்புலிங்கம், சாயர்புரம் நகர தலைவர் மணி, மூத்த நிர்வாகி நெல்லைகுணசிங், நிர்வாகிகள் அந்தோணி, மதிசேகர், நிலமுடையான், மால்ரவிராஜன், ராஜா, அந்தோணிமுத்து, ஏசுதாசன் செல்லதுரை, ராஜாமணி, மகளிர் அணி மங்களம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தியாகி செந்திபெருமாளின் பேரன் ராஜஉடையார் நன்றி கூறினார்.