அரசுடன் நடத்திய ஊதிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நேற்று இரவு முதலே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் 34 பேருந்துகளில் 16 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 18 பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 16 பேருந்துகளில் 2 பேருந்துகள் வெளியூருக்கு சென்ற பேருந்துகளும் இயங்கி வருகிறது. இதனால் 50 சதவீதத்திற்கு குறைவாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
குறைவான அளவே பேருந்துகள் வருவதால் தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம், கருங்குளம், செய்துங்கநல்லூர் என அனைத்து பேருந்து நிலையங்களிலும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என அனைவரும் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பேருந்துகள் குறைவான அளவே இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.