ஸ்ரீவைகுண்டம் நத்தம் வியாசனபெருமாள் கோவில் மாசித்திருவிழா முன்னிட்டு சுவாமி எம்இடர் கடிவான் கருடசேவை நடந்தது.
நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியான திருவரகுணமங்கை எனும் நத்தம் வியாசனபெருமாள் கோவியிலில் கடந்த11ந்தேதி முதல் மாசித்திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி 11 நாட்கள் திருவிழா நடக்கிறது.
5ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு எம்இடர் கடிவான் சுவாமி கருடன் வாகனத்தில் மாடவிதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்,
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும்,மாலையில் தங்கதோளுக்கினியானில் மற்றும்ஹம்ஸ வாகனம்,சிம்ஹ வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம்,இந்திர வாகனம், குதிரைவாகனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிவற்றில் சுவாமி விஜயாசனபெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி,தாயார்களுடன் வீதிபுறப்பாடும் நடக்கிறது,
பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி நடக்கிறது
விழாவில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத்,ஸ்லத்தார்கள் சினிவாசன், ராஜப்பாவெங்கடாச்சாரி ஸ்ரீனிவாசன்,மற்றும் திரளாக பக்தர்கள்கலந்து கொண்டனர்.