ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு விளம்பி வருஷ பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30மணிக்கு விஸ்வரூபம், 9மணிக்கு திருமஞ்சனம், காலை 9.10 மணிக்கு புதிய வஸ்திரம் சாத்துதல், காலை 10.30மணிக்கு நாலாயிரதிவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்றது. மாலை 6மணிக்கு வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் உற்சவர் கள்ளபிரான்சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சயனக்குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 6.45மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இரவில் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி விளம்பி வருஷ பஞ்சாங்கம் வாசித்தார். இதில், தக்கார் விஸ்வநாத், நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஆய்வாளர் ரவீந்திரன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், கண்ணன், ஸ்ரீனிவாசன், ஸ்ரீகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.