தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆழ்வார்தோப்பில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு, தூத்துக்குடி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், விளாத்திக்கும் எம்.எல்.ஏ உமாமகேஸ்வரி., அம்மா பேரவை செயலாளர் ஏரல் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஞானேஸ்வரன் வரவேற்றார்.
விழாவில், மாநில அமைப்புசெயலாளர் மாணிக்கராஜா சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். அப்போது, அவர், இதுவரை இல்லாத அளவிற்கு நமது மாவட்டத்தில் அதிகளவிலான உறுப்பினர்களை சேர்த்து மாநில அளவில் நமது மாவட்டம் முதலிடம் பெற்றிடவேண்டும் என்றார்.
இதில், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் பாலன், ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வை ஷேக்தாவூது, கருங்குளம் சிவசுப்பிரமணியன், உடன்குடி அம்மன் நாராயணன், பொன்ராஜ், ராஜ்மோகன், நகர செயலாளர் சுடலை, பேரூர்மாணிக்கம், வீரபாண்டியன், வழக்கறிஞர் இளங்கோ, இளைஞர் பாசறை துணைசெயலாளர் முத்துராமலிங்கம், திருப்பாற்கடல் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.