ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திரையுலக நடிகருமான எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள் விழா நேற்று அதிமுகவினர் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆழ்வார்திருநகரி நகர அதிமுக சார்பில் ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை அருகிலும், நாயக்கர் மண்டபம் அருகிலும், ஆழ்வை முதல் பேருந்து நிறுத்தப்பகுதியிலும் என மூன்று இடங்களில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு, அதிமுக நகர செயலாளர் செந்தில்ராஜகுமார் தலைமை வகித்தார். முன்னாள் தொகுதி இணைச்செயலாளர்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், நகர செயலாளர் செந்தில்ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் அனந்தவெங்கடாச்சாரி, அபுதாகீர், சுல்பிகார், அமுதா, மாஜிதா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகமணி, வார்டு செயலாளர்கள் அய்யாகுட்டி, ரத்னபுரிகோபால், இரட்டைமுத்து, சாமிசடகோபன், ஆறுமுகம்பிள்ளை, கண்ணன், ஆறுமுகம், சிவசுப்பிரமணியன், கேடிசி பெரியசாமி மற்றும் அதிமுகவினர், எம்.ஜி.ஆர்.ரசிகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்று ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய ஜெ.பேரவை செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி தலைவருமான அருணாச்சலம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், ஒன்றிய அவைத்தலைவர் மோகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராஜப்பாவெங்கடாச்சாரி, வழக்கறிஞர் சங்கரன், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சுடலையாண்டி, கழக பேச்சாளர் ரவி, கிளை செயலாளர் சேர்மத்துரை, பெருமாள், மகாராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.