ஸ்ரீவைகுண்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலி.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேய்க்குளம் சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் ஜாண்சன் வயது 9, பள்ளி விடுமுறை என்பதால் சக நண்பர்களுடன் தனது வீட்டருகே ஜாண்சன் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக திடீரென அருகிலிருந்த சுவர் இடிந்து ஜாண்சன் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த ஜாண்சனை அவனது பெற்றோர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பசோதித்த மருத்துவர் ஜாண்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். சாத்தான்குளம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். சுவர் இடிந்துவிழுந்து 9 வயதுசிறுவன் பலியானது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.