தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடந்தது.
மூன்று போட்டிகளாக நடந்த இந்த பந்தயத்தில் 11 பெரிய மாட்டு வண்டிகள், 23 சிறிய மாட்டு வண்டிகள், 14 குதிரை வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. இதற்கான பந்தயதூரம் பெருங்குளத்தில் இருந்து சாயர்புரம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பந்தயத்தினை அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார்.
பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசான 40 ஆயிரத்தினை கடம்பூர் இளைய ஜமீந்தார் கருணாகரராஜா வண்டியும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான 27 ஆயிரத்தை முத்தூர் மாடசாமி வண்டியும், குதிரை வண்டிபந்தயத்தில் முதல் பரிசான 20 ஆயிரத்தினை பெருங்குளம் செல்லதுரை வண்டியும் பெற்றது.
பரிசுகளை அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் வழங்கினார். விழா ஏற்பாட்டினை பெருங்குளம் பேரூராட்சி அதிமுகவினர் செய்திருந்தனர்.
——————–