
திருநெல்வேலியில் இருந்து லாரி ஒன்று பால் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வந்தது. இந்த லாரியை விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (52) என்பவர் ஓட்டி வந்தார். பால் வேன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருநெல்வேலி&திருச்செந்தூர் மெயின்ரோட்டில் உள்ள கேம்பலாபாத் ஊரை நோக்கி திரும்பியது. அப்போது மெயின்ரோட்டில் அரசு பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
மெயின்ரோட்டில் இருந்து திரும்பிய பால் வேன் மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில் ரோட்டின் ஓரத்தில் கிடந்த பள்ளத்தில் பால்வேன் கவிழ்ந்தது. இதில் பால்வேன் டிரைவர் மாரிமுத்து படுகாயமடைந்தார். பேருந்தில் பயணம் செய்த 42 பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழ்வார்திருநகரி போலிசார் படுகாயமடைந்த ஓட்டுநர் மாரிமுத்துவை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த அரசு பேருந்து ஓட்டுநர் பொன்னாக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
============