ஸ்ரீவைகுண்டம் அருகே காட்டுப்பகுதியில் கொட்டப்பட்ட வெளிநாட்டு கழிவுகள். அதிகாரிகள் விசாரனை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் காட்டுப்பகுதியில் கழிவுகள் கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலிசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலிசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
வல்லநாடு மலையின் கீழ்ப்பகுதியில் காட்டுப்பகுதியில் இந்த கழிவுகளை இரவு நேரங்களில் சுமார் 10 இடங்களில் கண்டெய்னர்களில் வந்து கழிவுகளை கொட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலிசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காட்டுப்பகுதியில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் நான்குவழிச்சாலையில் மிக அருகில் உள்ளது. மேலும் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகளில் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மேலும் வெளிநாட்டினருக்கான அடையாள அட்டைகள் கிடக்கின்றன. இதில் ஒரு அடையாள அட்டையில் கனடா நாடு பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அடையாள அட்டைகள் பெயர் ஊரின் பெயரில்லாமல் வேறு மொழிகளில் உள்ளது. இதனை வைத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ளதால் இந்த கழிவுகளில் கனடா நாடு பெயர் உள்ளதால் ஒரு சமயம் வெளி நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் இந்த காட்டுப்பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் என சந்தேகத்தின் பேரிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இங்கு காணப்படும் கழிவுகள் அனைத்தும் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அரைத்த நிலையில் அதாவது அடையாளம் காணாமல் இருப்பதற்காக அதனை அரைத்து கண்டெய்னர்களில் ஏற்றி இந்த பகுதியில் கொட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் போலிசார் மற்றும் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் வெளிநாட்டு கழிவுகளை வல்லநாடு மலை காட்டுப்பகுதியில் கொட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.