தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து வேட்பாளர்களும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்தார். மேலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தன்னிறைவுத் தொகுதியாக மாற்றித்தருவதாகவும், பேட்மாநகரம் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து பணிகளை உடனே செய்து தருவதாகவும் கூறி வாக்குகள் சேகரித்தார். மேலும் ஒருவர் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த காபியே வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்க்கு வழங்கினார். அதனை அவர் திறந்த வேனில் நின்றபடி குடித்து விட்டு வாக்குகள் சேகரித்தார். அவருடன் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் வந்து வாக்கு சேகரித்தனர்.