அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கிறிஸ்தவ ஜெபக்கூடங்களை மூட வேண்டியும் மதுரையில் இந்து முன்னனி பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் முருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து உள்பட இந்து முன்னனியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் எதிர்பாளர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
====