
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் முனியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள சிவசுப்பிரமணியபுரம் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்டது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் வெகுவிமர்சையாக திருவிழா நடைபெறும்.
நேற்று இரவு கோவில் அர்ச்சகர் வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த இரும்பு பெட்டி உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஊர்மக்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். ஊர்த்தலைவர் கனகராஜ் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
உண்டியலில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலாக பணம் இருந்ததை மர்மநபர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். போலிசார் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.