பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இதனை கண்டித்து பல்வேறு பகுதிகளில் சுப்பிரமணியசாமியின் உருவபொம்மையினை எரித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் குபேரன் தலைமையில் சுப்பிரமணியசாமியின் உருவபொம்மையினை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலிசார் உருவ பொம்மையை எரித்த 17 பேரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.