தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணி அளவில் ஒரு அரசு பேருந்து ஒன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடிரென்று வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் கல்வீசினார். இதில் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. உடனே செய்துங்கநல்லூர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் உடன்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அதே பகுதியில் மர்ம நபர் ஒருவர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் கல்வீசியதில் கண்ணாடி நொறுங்கியது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில் திருநெல்வேலி&தூத்துக்குடி மாவட்ட எல்கை முடிவு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பரம்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கினார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே சம்பவம் அறிந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
அதன்பின்னர் வந்த அனைத்து பேருந்துகளும் போலிசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
====


