தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
தற்போது சேர்வலாறு அணையில் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் கடந்த வாரம் பெய்த மழையால் வந்த தண்ணீர் அனைத்தையும் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தது. தண்ணீருடன் அமலைச்செடிகளும் அதிக அளவில் வந்தது. இந்த அமலைச்செடிகள் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் குளித்தவர்களுக்கு நோய் ஏற்பட்டது.
இந்த அமலைச்செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தலைமையில் அணைக்கட்டுப் பகுதி மற்றும் வடகால், தென்கால் பகுதியில் அமலைச் செடிகளை அகற்றினர். அமலைச்செடிகள் அகற்றும் பணியினை மாவட்ட வருவாய் ஆய்வாளர் வீரப்பன் துவக்கி வைத்தார். அதன்பின் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.