தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காலத்தில் கட்டப்பட்டது.
அதன்பின் தற்போது வரை அந்த பாலத்தை தாண்டி தான் ஸ்ரீவைகுண்டம் செல்லும் அனைத்து வாகனங்களும் செல்கிறது.
இந்நிலையில் இந்த பாலத்தின் சாலையை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. அதன்பின் ஆங்காங்கே பள்ளம் விழும் சமயத்தில் ஒட்டுப்போடப்பட்டது. நேற்று இந்த சாலையை முழுமையாக போடும் பணி நடந்தது. ஆனால் சாலையை முறையாக அமைக்காமல் சாலையின் இருபுறமும் அதிக அளவில் இடைவெளி விட்டு அமைத்தனர். இதனால் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றவர் எதிரே வாகனம் வருவதை பார்த்து ஒதுங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் காயமடைந்தார்.
இந்நிலையில் இன்று காலை சாலையை பார்வையிட வந்த அதிகாரிகளை ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தலைவர் காளியப்பன் தலைமையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் மற்றும் போலிசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலையை முழுமையாக சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
============