தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரத்தை துவங்குவதற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவினர் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர்.
அவர்களை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் தலைமையில் போலிசார் மறித்தனர். பின்னர் பிஜேபி கட்சியினர் 27பேரை போலிசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.