தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஸ்ரீவைகுண்டம் கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் அஸார் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் முகம்மது அஸ்கர் முன்னிலை வகித்தார். கிளைச் செயலர் ஹமீது அலிலி வரவேற்றார். மாநிலச் செயலர் அப்துல் ரஹீம், சிந்தா மதார் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் தமீம், மாவட்ட துணைச் செயலர் சிக்கந்தர், கிளைப் பொருளாளர் முகம்மது இம்ரான், கிளை துணைத் தலைவர் முகம்மது அரபாத் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.