ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் கரையோரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார இளைஞர்கள் சமூக வலைதங்கள் மூலம் ஒன்றிணைந்த நகரின் வளர்ச்சிக்காக ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நடந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத்தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். அமைப்பாளர்கள் ரமேஷ், கல்யாணராமன், பிச்சைகண்ணன், விரிவுரையாளர் லூக் ராஜரத்தினம் முன்னலை வகித்தனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன், சமூக ஆர்வலர் சந்துரு மற்றும் தூத்துக்குடி விகேன் தொண்டு நிறுவன அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து மக்கள் நலச்சங்கத்தினர்கள் இணைந்து அணையின் கீழ்பகுதியில் குப்பைகளை அகற்றினர். பின்னர் வடகால் வாய்க்கால் கரையோரம் மரக்கன்றுகள் நடும் விழா நடநதது.
வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள், உதவி காவல்கண்காணிப்பாளர் சகாயஜோஸ், பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் ரெங்கசாமி, கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத், பேராசிரியர் சேதுராமன் மற்றும் மக்கள் நலச்சங்கத்தினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.