தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வருகிறது. வருடம் தோறும் இந்த பகுதியில் விலையும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 2 மாதங்கள் அரசு கொள்முதல் நிலையம் அமைப்பது வழக்கம். அதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நத்தம் நவத்திருப்பதி கோவில் வளாகத்தில் கட்டிடம் கட்டப்பட்டு அதில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில் நெல்லை விற்று பயன் பெறுவார்கள்.
அதே போல் இந்த வருடமும் மாவட்டத்தில் பல பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் இன்று அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1660 ருபாயும், பொதுரகம் குவிண்டால் ஒன்றுக்கு 1600 ருபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு கொள்முதல் நிலையம் அமைத்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் பயிற்சி லாவண்யா, ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.