ஸ்ரீவைகுண்டத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
கட்சியின் நகரச் செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். தொகுதி உழவர் பாசறைத் தலைவர் பாலமுருகன், செயலர் வெள்ளபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சுப்பையா பாண்டியன் கட்சிக் கொடியேற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு பேசினார்.
ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் சுடலை, கருங்குளம் ஒன்றியத் தலைவர் சாகுல் ஹமீது, இணைச் செயலர் சந்திரன், துணைச் செயலர் கணபதி, தொகுதி உழவர் பாசறை இணைச் செயலர் ஜேசுராஜ், ஒன்றிய இணைச் செயலர் சுப்பையா, வீரத்தமிழர் முன்னணி நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஆறுமுகம், முத்துபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.