நெல்லை மாவட்டம் முன்னீர்குளத்தை சேர்ந்தவர் தங்கவேலு. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் மாலை வீட்டில் இருந்து பைக்கில் திருச்செந்தூருக்கு சென்றார்.
இவரது பைக் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வந்தபோது அம்மன்புரத்தில் இருந்து திருநெல்«லி நோக்கி சென்ற கார் எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கவேலு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் வழக்குப்பதிவு செய்து கோபாலசமுத்திரத்தை சேர்ந்த கார் டிரைவர் மாசானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.