ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (17.08.2018) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலக கட்டித்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினாராக இல்லாத சிறு சிறு விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோரும் அன்றைய தினம் குடும்ப அட்டை, ஆதார அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை அணுகி தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம், திருமண உதவித் தொகை நோய் நிவாரணம் மற்றம் கல்வி உதவி தொகை பெறவும் விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.