ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கமும் குமர குருபரர் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான ஒருவார இலவச பயிற்சி முகாம் குமர குருபரர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்,
ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் ரமேஷ், சமூக ஆர்வலர் சந்துரு, டிவிஎஸ் பிச்சை கண்ணன், வழக்கறிஞர் கல்யாணராமன், விரிவுரையாளர் லூக் ராஜரத்தினம், முருகன், சுடலை கண்ணன் மற்றும் உமையார் ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.