காஷ்மீரில் ஆஷிபா கொலை செய்ததை கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது பெண் குழந்தையை கடத்தி கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கோரியும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் சம்சுதீன் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் முகம்மது ஒலி கண்டன உரையாற்றினார். ஆஷிபா கொலை செய்ததை கண்டித்தும் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.