ஸ்ரீவைகுண்டத்தில் பால்வேன் மோதி படுகாயம் அடைந்த வியாபாரிகள் சங்கச் செயலளார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம் மகன் தங்கவேல் (37), இவர் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். மேலும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் நண்பருடன் அங்குள்ள பழைய ஆற்றுப்பாலத்தில் நடைபயிற்சி சென்றார். அப்போது அதிவேகமாக வந்த பால் வேன் தங்கவேல் மோதியது.
விபத்து நடந்த உடன் பால் வேன் டிரைவர் அங்கு வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த தங்கவேல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால் வேன் மோதி வியாபாரிகள் சங்கச் செயலளார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.