தூத்துக்குடி மாவட்டத்தில் வீரதீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற தியாகத்திற்காகவும் அசோக சக்கரா விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது…
2018ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவின் போது வழங்கப்படும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற தியாகத்திற்காகவும் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் (காவல் துறை, ரயில்வே காவல்துறை, தீயணைப்பு காவல் துறை) ஆகியோருக்கு அசோக சக்கர விருதிற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் இது தொடர்பான விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமூகநல அலுவலக முகவரியில் பெற்று 20.04.2018 அன்று மாலை ஐந்து மணிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.