விரைவில் தமிழக அரசு ஆட்சியில் இருந்து அகற்றபடும் செய்துங்கநல்லூரில் அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ பேசினார்.
செய்துங்கநல்லூரில் திமுக சார்பில் தோணி முகம்மது உசேன் நினைவு கொடிகம்பத்தில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றியச் செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். பொதுகுழு உறுப்பினர் பரமசிவன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகராஜன், மாவட்ட பிரதிநிதி கணேசன், விவசாய சங்க தலைவர் குமார், தோணி அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்போது பேசும் போது, தமிழகத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் போது தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி அகற்றப்படும். கலைஞர் ஆட்சியில் தான் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஒரு கிலோ ரேஷன் அரிசி 2 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 1 ரூபாயாக மாற்றியது கலைஞர் அரசு தான். இன்று பேருந்து கட்டணத்தை உயர்த்தி எடப்பாடி அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் 5 வருடத்தில் ஒரு முறை கூட பேருந்து கட்டண உயர்வு இல்லை. அதிமுக தற்போது இரண்டாக பிளந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது. துரோகத்தின் ஒட்டுமொத்த கும்பல் தான் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. என அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், முத்தையா புரம் கருணாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அனஸ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய கழக செயலாளர் சண்முகையா, ஊராட்சி செயலாளர் பரமக்குறிச்சி இளங்கோ,சுப்பையா கண்ணன், ஸ்ரீரெங்கன், நம்பி, பக்கப்பட்டி சுரேஷ், சுடலைமணி, இசக்கி, தர்மலிங்கம், முருகேசன், பட்டன், தாமஸ் பூபாலராயன், கொம்பையா, சிவாஜி, இசக்கி, காஜா முகைதீன், காளிமுத்து, பூல்பாண்டி, மாடசாமி, பட்டுராஜ், முருகன், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.